டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு.. வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற்ற 57 நாட்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.குரூப் 1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 10 முதல் 13 வரை சென்னையில் நடைபெற்றது. இத்தேர்வை 1,888 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது இதிலிருந்து 190 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.தற்போது நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் குறித்த தனிப்பட்ட தகவல் தேர்வாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தவறான மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் காரணமாக விண்ணப்பதாரருக்கு தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்றால் ஆணையம் பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




