ஜெய்சங்கரை தாக்க காலிஸ்தானிகள் முயற்சி
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் லண்டன் பயணத்தின் போது, பெரும் பாதுகாப்புக் குளறுபடி நடந்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சிலர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன், அவரது காரை தாக்க முயன்ற ஒருவர், இந்தியக் கொடியையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். உடனடியாக அத்துமீறிய நபரை கைது செய்த போலீசார், மற்றவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




