திருமண விழா முடிந்து வந்த ஆசிரியை.. சாலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
திருப்பூர் அருகே திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஆசிரியை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை, சங்கரி நாடார் பகுதியை சேர்ந்தவர் மாலதி.
இவர் உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆசிரியை மாலதி உறவினர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பிய பொழுது சாலையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அவரை அந்த பகுதி பொது மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





