பிளஸ் டூ மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற நபர்..!
தலைவாசல் அருகே பிளஸ் டூ மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் மீது குழந்தை திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள லாரி ஓட்டுனரின் மகளான பிளஸ் டூ மாணவி கடந்த ஒன்றாம் தேதி மாலை வீட்டில் இருந்து மாயமானார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய பொழுது அவர் ராசிபுரம் பகுதியை சேர்ந்த தக்காளி வியாபாரி நவீன் குமார் அவரை கடத்தி சென்று சேலத்தில் மாணவியுடன் நவீன் குமார் இருப்பது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்ற பொழுது இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் அதனால் தலைவாசல் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலையணை போலீசார் தலைமையிலானத் அடிப்படை போலீசார் மாணவியை தேடும் பணியை தீவிரபடுத்தினர். அப்பொழுது கோயிலில் மாணவிக்கும் நவீன் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற பொழுது இருவரும் மணக்கோலத்தில் இருந்துள்ளனர்.
அவர்களை மீட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் மீது குழந்தையை திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





