--- --:--:-- --

தாயார் தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

6

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்று தனது தாயாரை பார்த்து நலம் விசாரித்தார்.

 

மேலும் அவருக்கு நடைபெறும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டிருந்தார். தொடர்ந்து மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon