திடீரென கடைக்குள் பாய்ந்த பேருந்து..!
திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் புகுந்ததால் விபத்து நேரிட்டுள்ளது. மினி பேருந்து மோதியதில் சாலையோரம் இருந்த சரக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தது.
ஓட்டுனருக்கு வலிப்பு வந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி கணபதி பாளையத்திலிருந்து மினி பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது விபத்து நடந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





