ஹிந்தி எதிர்ப்பை வலியுறுத்தும் வாசகங்களில் கோலமிட்ட பெண்கள்..!
மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். சென்னை அடுத்த மதுரவாயில் அருகே மகளிர் குழுவினர் ஒன்று கூடி மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்டனர்.
அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் தங்கள் வீடுகளுக்கு முன் இந்தியை திணிக்காதே தமிழர்களை வஞ்சிக்காதே மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே உள்ளிட்ட வாசகங்களை கோலமாக வரைந்து பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரோட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி தராமல் வஞ்சிப்பதாக மத்திய அரசை கண்டித்து பெண்கள் கோலமிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





