மாணவிக்கு பாலியல் தொல்லை..!
புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி ஐந்து மணி நேரத்திற்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதலியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்டனை பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பள்ளியை சூறையாடிய பொதுமக்கள் தமிழாக்கம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்து மணியிலிருந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





