பள்ளிச் சீருடையில் மரத்தில் சடலமாக தொங்கிய 2 சிறுமிகள்..!
ஒடிசாவின் பள்ளிச் சீருடைகள் இரண்டு சிறுமிகள் மரத்தில் சடலமாக தொங்கிய சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒடிசாவில் கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாத இரண்டு சிறுமிகள் குறித்து பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமிகளை தேடி வந்த நிலையில் காட்டில் உள்ள மரம் ஒன்றில் சிறுமிகளின் உடல்கள் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு சிறுமிகளும் ஒரே உள்ளூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





