--- --:--:-- --

விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்..!

8

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலை கல்லூரி விடுதியில் தங்கிய முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு வகுப்பு பேராசிரியருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பாண்டிக்கு போகலாம் வா நைட்டே வந்துடலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்திருக்கிறார் மாணவி அதற்கு மறுத்து போனை கட் செய்துள்ளார்.

 

மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பொறுத்துக் கொள்ளாத மனைவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

புகாரின் அடிப்படையில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து குமாரை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மாணவர்களுக்கு கல்வி மற்றும் நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் ஆசிரியர்களை இந்த அசிங்கத்தை செய்வது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon