--- --:--:-- --

திருப்பூர் : “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு பணி

10

திருப்பூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் அவிநாசி தாலுகாவில் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்.

 

இந்த நிலையில் திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், கலெக்டரை வரவேற்றார்.தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், புதிதாக திறக்கப்பட்ட கலையரங்கத்தை பார்வையிட்டு, அருகில் இருந்த தேசிய கொடி கம்பத்தின் கீழ் போட்டிருந்த கல்வெட்டில் உறுதிமொழி தவறாக உள்ளது என்றும் அதனை மாற்றி அமைக்கவும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து முதல் மாடியில் உள்ள ஏழாம் வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் கலந்து உரையாடினார்.

 

மாணவர்களும் கலெக்டர் அவர்களுடன் சந்தோஷமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கணிதம் உள்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளை கேட்க மாணவர்கள் பதில் அளித்தனர். அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் மாணவர்களிடம் நானும் கணிதம் மேஜராக எடுத்து படித்துள்ளேன் என்று பெருமையாக குறிப்பிட்டார். பின்னர் தரைதளத்திற்கு வந்த கலெக்டர் அங்கு உள்ள சத்துணவு கூட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

சத்துணவு பணியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றார். இதனை தொடர்ந்து தரை தளத்தில் உள்ள மற்றொரு வகுப்பிற்கு சென்று அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடமும், பின்னர் மாணவர்களிடமும் பல்வேறு பாட சம்பந்தமான கேள்விகளை மாணவர்கள் கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களிடம் என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்க உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்.

 

அதற்காக ஆசிரியையிடம் பர்மிஷன் வாங்கி ஜன்னல் வழியாக பார்த்தோம். நீங்களே வகுப்பிற்கு வந்ததால் எங்களுக்கு சந்தோஷ படுத்தி விட்டீர்கள் என்று குசியாக பதில் அளித்தனர். பின்னர் காலை சத்துணவில் பிடித்த உணவு என்னென்ன? என்று கேட்க மாணவர்களும் காலையில் சத்துணவில் தரும் உணவுகளை பட்டியலிட்டு அனைத்தும் பிடிக்கும் என்று கூற கலெக்டர் சிரித்தவாறு மாணவர்களிடம் விடைபெற்று சென்றார். இதனை தொடர்ந்து பள்ளிக்கு வெளியே கட்டிட பணிகள், பெயிண்டிங் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்பொழுது தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் இல்லை சார் என்று சொல்ல அதற்கு அருகில் காலியிடங்கள் இருந்தால் அந்த இடத்தில் பாதுகாப்புடன் மாணவர்களை அழித்து சென்று விளையாட அனுமதிக்கும்படி என்று கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். பின்னர் இருக்கும் இடத்தில் வாலிபால் கபடி போன்ற விளையாட்டுக்கள் அமைக்க போஸ்ட் அமைத்து தர நகராட்சி பொறியாளரிடம் அறிவுறுத்தினார். பின்னர் அனைவரிடரும் விடை பெற்று சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon