--- --:--:-- --

இருட்டில் அமர்ந்து கொண்டு அமாவாசையைத் தேடுகிறார் – இபிஎஸ்

1

தமிழ்நாட்டைப் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசுதான் எனக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், தமிழ்நாடு திவாலாக வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கள ஆய்வுக்காக சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 161 கோடி மதிப்பில் 53 ஆயிரத்து 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் முதலமைச்சருக்குச் செங்கோல் வழங்கிக் கௌரவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்திற்குக் கொண்டு வரப்பட உள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார். அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல், திண்ணையில் அமர்ந்துகொண்டு வெட்டிக்கதை பேசுவதைப் போன்று, எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததைப் பேசுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

 

அரசின் எந்தத் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வெட்டிச் செலவு எனக் கூறுகிறார் எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அவர் போடுகின்ற எல்லாக் கணக்கும் தப்புக் கணக்கு என்று விமர்சித்தார்.எடப்பாடி பழனிசாமி இருட்டில் அமர்ந்து கொண்டு அமாவாசையைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

 

மத்திய அரசைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பதால், எதிரியாக நினைத்து அவர்கள் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் மத்திய அரசு திட்டத்திற்கும் மாநில அரசு நிதிதான் செலவிடப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon