காஸாவில் போர் நிறுத்தம் அமல்..!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், 6 வார போர் நிறுத்தம் இந்திய நேரப்படி மதியம் 2.45 மணியளவில் காஸாவில் அமலாகியுள்ளது.
ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள பிணைக் கைதிகளின் பட்டியலைப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் அமலானதை தொடர்ந்து காஸா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




