நாம் தமிழர் வேட்பாளர் மீது பாய்ந்த நடவடிக்கை..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் அனுமதி பெறாமல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட எட்டு பேர் மீது ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக நிலை கண்காணிப்புக் குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை பரப்புரையின்போது ஆரத்தி எடுத்தவருக்கு பணம் வழங்கியதாக எழுப்பப்பட்ட புகாரில், திமுக மாவட்ட மாணவரணியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் 12-வது வார்டு செயலாளர் வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, வேட்பாளர்களை பிரசாரத்திற்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுவிதா போர்டல்” மூலம் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். வேட்பாளர்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்றும் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெற்று வருவதாகவும் ராஜகோபால் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுவிதா போர்டல்” மூலம் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். வேட்பாளர்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்றும் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார். தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெற்று வருவதாகவும் ராஜகோபால் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




