ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடர் கொலை..!

லமுறை பரிகாரம் செய்தும் கணவனுடன் பிரச்சனை தீராததால் ஜோதிடரை ஆள் வைத்து கொலை செய்த பெண் போலீசில் சிக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஜான் ஸ்டீபன் என்பவரிடம், கலையரசி என் பெண் கடந்த 3 ஆண்டுகளாக ஜோதிடம் கேட்டு பரிகாரம் செய்துள்ளார்.

 

ஆனாலும், கணவனுடன் பிரச்சனை தீராததால் பரிகாரத்திற்கு ஆன ரூ.9.5 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஜான் ஸ்டீபன் கொடுக்காததால் அவரை ஆள் வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.