--- --:--:-- --

சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..!

1

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று மாலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக மதுரை – சென்னை இடையே முன்பதிவில்லாத எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவையை அறிவித்துள்ளது.

 

இந்த ரயில் மதுரையில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட உள்ளது. திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், திண்டிவனம் வழியாக இந்த ரயில் நள்ளிரவு 12.45 மணியளவில் எழும்பூரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றிரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மண்டபம் – சென்னை சிறப்பு ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

 

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக நாளை சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், “பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் வசதிக்காக நாளை தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே கூடுதல் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.00, 4,30, 5.00, 5.45, 6.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon