--- --:--:-- --

டெஸ்ட் டிரைவ் என கூறி வண்டியை எடுத்துச் சென்ற நபர்..!

8

வடிவேலு பட காமெடிகள் வருவதைப்போல டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி ஸ்கூட்டருடன் திருடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜனனம் படத்தில் வண்டி ஒன்றை வாங்க டெஸ்ட் டிரைவ் செய்ய சொல்லி திருடர்களிடமே ஸ்கூட்டரை கொடுத்து அனுப்பி வைக்கும் காமெடியை பார்த்து வயிறு குலுங்க சிரித்திருப்போம்.

 

இந்த காமெடியை போன்று சம்பவம் நிஜத்திலேயே நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச முசபத் நகரில் உள்ள ஷோரூமில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றரை டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார் ஒரு ஆசாமி. ஷோரூம் உரிமையாளர் நம்பிக்கையை பெற தன் பழைய வண்டியையும் விட்டுச் சென்றுள்ளார்.

 

மதியம் முதல் இரவு வரை இரவு காத்து கிளியாய் உரிமையாளரும் பழைய வண்டியுடன் காத்திருக்க அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon