அய்யன் திருவள்ளுவர் விருதை படிக்கராமு-வுக்கு வழங்கிய முதலமைச்சர்..!
2025 ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதை புலவர் மு.படிக்கராமுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள வள்ளுவர் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில், செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் என்று அழைக்கப்படும் மு.படிக்கராமுவிற்கு நடப்பாண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதை முதலமைச்சர் வழங்கினார்.குறள் காட்டும் வழியில் வாழ்தல், குறள் வழி குடியரசு அமைப்போம் ஆகிய கொள்கைகளை செயலாற்றி வருவதால், இவ்விருது வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




