ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்ற கார்..!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் உள்ள மின்கம்பத்தில் மோதி சுழன்று நின்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
காரில் இருந்த இருவரையும் அந்த பகுதி மக்கள் பத்திரமாக மீட்ட நிலையில் அவர்கள் அதிக போதையில் இருந்ததாகவும் காருக்குள் பத்துக்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் இருந்ததாகவும் கூறிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





