திருப்பூர்: அஜாக்கரதையாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை சிறையிலடைப்பு..!
திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயலலிதா நகரை சேர்ந்தவர் வீராள் (65). அவர் கடந்த 8ம் தேதி அன்று காலை 9 மணியளவில் அவரது மகனுடன் நின்று கொண்டு இருந்தபோது 17 வயது சிறுவன் ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கரவாகனத்தை ஒட்டி வந்து அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி வாகனத்தை ஒட்டி வந்ததற்காக மேற்படி சிறுவன் கையகப்படுத்தப்பட்டு, மேலும் இளம்சிறார் உரிய ஒட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் வாகனத்தை ஓட்டுவதற்காக வழங்கியதற்காக வாகன உரிமையாளரான இளம்சிறாரின் தந்தை ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு ஒட்டுனர் உரிமம் இல்லாமல் இளம்சிறார் வாகனத்தை இயக்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





