அமெரிக்காவில் பறவை காய்ச்சலால் ஒருவர் பலி..!
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூசிலாந்து மாகாணத்தில் வசித்து வந்த முதியவருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகளுடன் தொடர்புடையதால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் வேறு யாருக்கும் இதை தொற்று ஏற்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





