--- --:--:-- --

விண்ணில் இருந்து விழுந்த பிரம்மாண்ட இரும்பு வளையம்..மர்ம காட்சி..!

4

விண்ணில் இருந்து விழுந்த பிரம்மாண்டமான இரும்பு வளையத்தால் கிராம மக்கள் அதிர்ச்யில் மூழ்கியுள்ளனர். எனினும் நல்வாய்ப்பாக அந்த வளையம் விழும் பொழுது கீழே யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

 

500 கிலோ எடையும் 7 அடி விட்டமும் கொண்ட அந்த வளையம் ஏதேனும் ஒரு ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என கென்யா விண்வெளி மையம் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கத்தை கென்யா விண்வெளி மையத்தினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

 

உலக நாடுகள் இதுவரை அனுப்பிய ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் ஆயுட்காலம் முடிந்தபின் விண்வெளி குப்பைகளாக சுற்றி வருகின்றன. இதில் ஒன்று தற்பொழுது விழுந்திருப்பதாக கருதப்படுகிறது. எனும் இதுபோன்று விழுவது அரிதிலும் அரிதான நிகழ்வு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon