படிக்க விரும்பும் மகள்..குடிகார தந்தை செய்யும் கொடூரம்..!
சேலம் அருகே பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கும் மது போதைக்கு அடிமையான தந்தையிடம் இருந்து தன்னை பாதுகாத்து தொடர்ந்து கல்வி கற்க உதவ வேண்டும் என்று பத்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
தொழிலாளி ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவரது முதல் மகள் பள்ளி படிப்பை முடிக்காத நிலையில் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்கிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு, மூன்றாவது மகள் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது மகளையும் பள்ளிக்கு செல்ல கூடாது என்று தன்னை மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ள மாணவி இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





