எனக்கு கமிஷன் வரணும்..ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது புகார்..!
தர்மபுரியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊராட்சியில் எந்த பண பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் தவித்து வருவதாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி ஊராட்சியில் மஞ்சுளா சரவணன் என்பவர் தலைவராகவும் ராசாத்தி வடிவேலு என்பவர் துணை தலைவராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதனை கேட்டதால் தன்னை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மஞ்சுளா துணைத்தலைவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





