--- --:--:-- --

ஏழாவது முறை ஆட்சியமைக்க வேண்டும் என்பதே நம் இலக்கு – முதலமைச்சர்

16

எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் திமுக கூட்டணி சரித்திர வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

 

திமுக செயற்குழுக் கூட்டம், அதன் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

முதலாவதாக அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசி அவரது தியாகத்தை இழிவுபடுத்தியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதையும், திமுக ஆட்சி வருங்காலங்களில் தொடர்ந்திடுவதையும் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon