--- --:--:-- --

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளை சாவு..!

3

புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்று கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவன் மூளை சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் நான்காம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் காண ரேவதி என்ற ரசிகை குடும்பத்தோடு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்றார்.

 

அப்பொழுது அல்லு அர்ஜுனன் அங்கு வந்ததால் ரசிகர்கள் முண்டியடித்தனர். அதற்கு கீழே விழுந்த ரேவதியும் அவரது ஒன்பது வயது மக னையும் ரசிகர்கள் மிதித்தபடி சென்றனர். அதில் ரேவதி உயிரிழந்தார். தொடர்ந்து சுயநினைவின்றி மீட்கப்பட்ட ஒன்பது வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. தற்போது அவர் முளைச்சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இடைக்கால பிணையில் அவர் வெளியே வந்துள்ள நிலையில் சிறுவன் மூளை சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon