--- --:--:-- --

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி..!

6

செங்கம்புனரி அருகே வீட்டில் பதிக்க வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள நாட்டார்மங்கலம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

 

அப்பொழுது வேங்கிப்பட்டி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது. அதிலிருந்து கேசவ் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 2800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

 

அந்த அரிசி மூட்டைகள் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon