மழையால் துடி துடித்து பறிபோன குழந்தையின் உயிர்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலாயுகுடி கிராமம் யாதவர் தெருவில் வசிக்கும் பால்ராஜ் – ஜெயலட்சுமி விவசாயி தம்பதிக்கு ஐந்து வயதில் கீர்த்திகா என்ற மகள் இருந்தார்.
வீட்டில் தூங்கி இருந்த கீர்த்திகா இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியே வந்த பொழுது மழையால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் அனிதாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வருவாய்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





