காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.தன்படி அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இதனிடையே, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை மருத்துவமனை தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




