கோலாகல கார்த்திகை தீப கொண்டாட்டம்..!
விழுப்புரத்தில் மாவளி சுற்றி கிராமத்தினர் கார்த்திகை தீபத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள மக்கள் மழையும் பொருட்படுத்தாமல் மாவளியை தயாரித்தனர்.
தீபத்தை ஏற்றி வைத்து பாரம்பரிய முறைப்படி மாவலி சுற்றினர். பனைமர பொருட்களால் தயாரிக்கப்படும் இயற்கை மத்தாப்பு எனப்படும் மாவளியை கிராமத்தினர் சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்பொழுது மாவளியில் இருந்து தீப்பொறிகள் பறந்தது காண்போரை வியக்க வைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





