சேலத்தில் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரயிலில் கற்பூரம் ஏற்றிய ஐயப்ப பக்தர்களின் வீடியோ வெளியான நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது சேலம் ரயில்வே காவலர்கள்; ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவலர்கள் எச்சரிக்கை.