--- --:--:-- --

கிணற்றில் இருந்து பேயின் சத்தம் கேட்பதாக நினைத்த கிராமம்..!

6

தாய் நாட்டில் கிணற்றில் தவறி விழுந்து உதவி கேட்ட நபரின் குரலை பொதுமக்கள் பேய் என நினைத்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

 

தாய்லாந்து மியான்மர் எல்லையில் உள்ள காட்டில் பயன்படுத்தப்படாத கிணற்றில் மூன்று நாட்களாக சிக்கிய சோனா என்ற நபர் தன்னை காப்பாற்றக் கூறி அவ்வாறு குரல் எழுப்பி உள்ளார். இதனை கேட்டு சுற்று வட்டார மக்கள் கிணற்றிலிருந்து பேய் அழைப்பதாக நினைத்துக் கொண்டு ஆட்சிமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்துள்ளனர்.

 

நல்வாய்ப்பாக வித்தியாசமான குரல் கேட்பதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கிணற்றில் தவறி விழுந்த நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுக்கும்படி காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon