விஷமான குடிநீர்..நடுங்கிய சென்னை வாசிகள்..!
சென்னை பல்லாவரத்தில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்தது தான் காரணமா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டவர் இருவரின் குடும்பங்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன் தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





