--- --:--:-- --

பிரேக் லாக் ஆனதால் பற்றி எரிந்த ரயில்..!

9

பெரம்பலூர் வழியாக சென்ற சங்கமித்ரா பயணிகள் விரைவு ரயில் இன்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஜினில் உள்ள சக்கரத்தின் பிரேக் லாக் ஆனதால் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து தீ அணைக்கப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon