ஆசிரியருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் பிரான்சிஸ் மாற்றப்பட்டு இருக்கிறார்.

 

அதேபோல அங்குள்ள சீதாராமன் மரிச்சிப்பட்டி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

இதனையடுத்து பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஆசிரியர் வந்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.