ஆன்லைன் கிளாஸ் மட்டும் தான்..நேரடி வகுப்பு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற முடிவு..!
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளின் நேரடி வகுப்பு நடத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்ற நிராகரித்துவிட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன.
அவற்றில் 37 மையங்களில் காற்று மாசு தரக்குறியீடு 400க்கு மேல் பதிவானது. பனிமூட்டம் போல் காற்று மாசு நிலவதால் சாலைகளில் போக்குவரத்து மட்டுமே விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆன்லைன் பாடங்கள் நடத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





