திருப்பூர்: TATA ACE வாகனத்தை திருடிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்து சிறையிலடைப்பு

திருப்பூர், பெருமாநல்லூர், அப்பியம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது-45) என்பவர் திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலுவபட்டியில் ஸ்ரீ அங்காளம்மன் பேட்டரி ஒர்க்ஸ் என்ற ஒரு ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.

 

இவரது ஒர்க்ஷாப்பிற்கு கடந்த 28.09.2024-ம் தேதி மதியம் 13.30 மணிக்கு நெருபெரிச்சல், விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ரஜினி (வயது-44) என்பவர் தனது TATA ACE வாகனத்தில் பழுதடைந்த ஒயர்களை பழுது நீக்குவதற்காக விட்டுசென்றுள்ளார்.

 

மேற்கண்ட கடையில் வேலை செய்பவர்கள் அன்று இரவு நேரமாகிவிட்டதால் TATA ACE வாகனத்தை கடைக்கு வெளியில் நிறுத்திவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை சுமார் 09.00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது TATA ACE வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

 

இது தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்து வழக்கானது விசாரணையில் இருந்துவந்தது. விசாரணையில் மேற்கண்ட வாகனத்தை திருடிய சுப்பிரமணி(30), கார்த்திகேயன் (24), ரசோப்(38)ஆகியோர்கள் திருடியது தெரியவந்தது.

 

மேலும் மேற்கண்ட மூன்று எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து காவல் ஆளினர்களையும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி, வெகுவாக பாராட்டினார்.