கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரில் அதிவேகமாக பயணம் செய்து instagramல் இளைஞர்கள் பதிவேற்றம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோயிலுள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் திருவனந்தபுரம் கன்னியாகுமரி சாலையில் கல்லூரி பெண்கள் முன்பாக கெடுத்துக்காட்டி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.
பார்வையிட நேரடியாக சென்றதையடுத்து அந்த மாணவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் இதே போன்று சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவரின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அதே திருவனந்தபுரம் கன்னியாகுமரி சாலையில் ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாக மற்றொரு இளைஞர் தனது சொகுசு காரை சாலையில் அங்கும் இங்குமாக திருப்பி பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணம் செய்துள்ளார்.
இந்த காட்சிகள் வெளியானதையடுத்து மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை போலீசார் தீவிர படுத்த வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.