வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..உயிர் தப்பிய சிறுமிகள்..!

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்து சிறுமிகள் நூலிலையில் உயிர்த்தப்பினர். நெல்லையம் அருகே உள்ள பகுதியில் பாலகிருஷ்ணன் – கவிதா தம்பதி வசித்து வருகின்றனர்.

 

இரவு இருவரும் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது இரண்டு மகளும் பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்த பொழுது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

 

மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன்பு சிறிய கல் விழுந்ததால் சிறுமிகள் இருவரும் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர். இந்த பகுதியில் உள்ள பல காலணி வீடுகள் இடியும் நிலையில் உள்ளதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.