கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை..மீட்கும் பொழுது சீறிப்பாய்ந்ததால் தெரித்து ஓடிய மக்கள்..!

ர்மபுரி மாவட்டம் பாலக்கூர் அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பி ஓடியதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சிறுத்தை தவறி விழுந்துள்ளது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுத்தை மேய்ப்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது திடீரென சிறுத்தை கிணற்றில் இருந்து வெளியேறி தப்பியோடியது.

 

இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை தப்பி ஓடியதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.