மது கொடுத்து மாணவிகளிடம் அத்துமீறல்..PET ஆசிரியரால் சிக்கிய பள்ளி..!

திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியின் முதல்வர் சார்லஸ் செயலாளர். சையத் அகமது ஆகியோரை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த மாதம் 22 ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துச் சென்று ஐந்து மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறியதாக உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் அளிக்காமல் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தற்பொழுது பள்ளி முதல்வரும், செயலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.