சேற்றை கழுவ சென்ற மாணவன்..கால் வழுக்கி குளத்தில் விழுந்து உயிரிழப்பு..!

செம்மஞ்சேரி அருகே குளத்தில் இறங்கிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அவர் மீது சாலையில் நின்றிருந்தவரின் காலில் சேறு தெரித்துள்ளது.

 

அதனால் குளத்தில் காலை கழுவ சென்றுள்ளார். அப்பொழுது படியில் கால் வைத்த போது குளத்தில் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.