ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரித்துக் கொண்டு தங்களை வீட்டிலிருந்து மகன் இறக்கி விட்டதாகவும் தாயும் தந்தையும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த சவுரமுத்து சின்னம்மாள் தம்பதியினர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சௌடமுத்து வெங்காய வியாபாரத்திற்காக வெளியூர் சென்றிருந்த பொழுது மகன் மணிகண்டனும் அவரது மனைவியும் சின்னமாலை மிரட்டி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு பத்திரத்தை அபகரித்ததாக தெரிகிறது.
அதை தொடர்ந்து மகன் மணிகண்டன் தரப்பினர் வீட்டை விட்டு விரட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் அனாதையான சௌடமுத்து அவரது மனைவி சின்னமாலாவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு முடியை சந்தித்து மனு அளித்தனர்.
தங்களது வீட்டை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மகன் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது வீட்டை மீட்டு தர வேண்டும் எனவும் ஆட்சியரிடம் தம்பதியினர் கோரிக்கை வைத்தனர்.