லாட்டரி சீட்டு குழுக்களில் ரூ.25 கோடி பரிசு..ஆனால் குழப்பம்..!

கேரள மாநிலம் வயநாடு அருகே லாட்டரி சீட்டு குழுக்களில் 25 கோடி ரூபாய் பரிசு லாட்டரி சீட்டு வாங்கிய நபர் யார் என தெரியாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு லாட்டரி டிக்கெட் நடத்துவது வழக்கம்.

 

இந்த குழுக்கள் மூலம் கேரளா அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது, ஒரு லாட்டரி சீட்டின் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குலுக்களில் ஒரு எண்ணுக்கு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது.

 

இந்த என் சுல்தான் பத்தேரியை சேர்ந்த லாட்டரி நிறுவன உரிமையாளர் நாகராஜ் என்பவர் கடையிலிருந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த லாட்டரி வாங்கியவர் யார் என தெரியவராததால் பரிசு யாருக்கு என்பது குழப்பம் ஏற்பட்டுள்ளது.