மதுரை ஜிகர்தண்டா கடையில் அதிர்ச்சி..ஜிகிர்தண்டாவில் இருந்த கம்பி..அச்சமடைந்த வாடிக்கையாளர்..!
திருப்பூரில் பிரபல கடையில் வழங்கப்பட்ட ஜிகர்தண்டாவில் கம்பி இருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கார்த்தி முரளி இருவரும் அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் ஜிகர்தண்டா கடையில் ஜிகர்தண்டா வாங்கி அருந்தியுள்ளனர்.
அப்பொழுது அதில் ஒரு கம்பி வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 50 லிட்டர் மதிப்பிலான ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அளித்ததோடு அபராதம் விதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





