--- --:--:-- --

அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்..!

7

சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

இனி ஆண்டுதோறும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். பத்திரப்பதிவு உட்பட அனைத்து அரசியல் அனைத்து துறைகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

பால் பொருட்களின் விலை பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நியாய விலை கடைகளில் குறித்து நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார். சொத்து வரி இருமுறை உயர்த்தப்பட்டதுடன் ஆண்டுதோறும் 6 வீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

திமுக அரசை கண்டித்து உயர்த்தப்பட்ட சொத்து வரி உடனடியாக திரும்ப பெறப்படுகிறது. அதிமுக சார்பில் இன்று மனித சங்கலி போராட்டம் நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon