திருவாடானை சினேகவல்லிபுரம் அருகே கடம்பாகுடி கண்மாய் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஶ்ரீ ஜெயவீர காளியம்மன் ஆலய 44 ஆம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த செப் 23 -ல் காப்பு கட்டுதளுடன் உற்சவவிழா தொடங்கி நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 29ம் தேதி 702 பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடைசி நாள் உற்சவ விழாவாக பால் காவடி, காவடி எடுத்தல், வேல் காவடி, மயில் காவடி எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து தீ சட்டி எடுத்தும், பூத்தட்டு எடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு கலரி பூஜை தொடர்ந்து நல் இரவில் அம்மனுக்கு எரி சோறு விடுதல் மற்றும் படையில் பூஜைகள் நடைபெறும்.
மேலும் செய்திகள் :
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
திருவாடானை தாலுகா தலைமை இடத்தில் அவலம்..அடிப்படை வசதி இல்லாத அரசு துவக்க பள்ளிக்கூடம்..கழிப்பிடத்தில...
விஜய் திமுகவில் சேர்ந்து விடலாம்..பாஜக விமர்சனம்..!
ஈபிஎஸ் தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை..!
ஏமாற்றிய 8 வயது சிறுவன்.. சென்னையில் நடந்த அந்த சம்பவம்..!
இந்தோனேசியா இயற்கை பேரிடர் பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு..!