பாடம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென உயிரை விட்ட ஆசிரியர்..!
பட்டுக்கோட்டையில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெல்லை மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
வகுப்பில் சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஆசிரியர் செல்லதுரைக்கு உடன் பயின்ற மாணவிகள் உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





