நாளை முதல் 3 நாள் தொடர் விடுமுறை
தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கமான 2 நாள் வார இறுதி விடுமுறை. திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் விடுமுறை. சுற்றுலா, ஆன்மிகப் பயணம் போன்றவை செல்ல முடிவு செய்தவர்கள் விடுமுறையை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




