திருப்பூர் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி , நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் தினசரி பெறப்படும் கோரிக்கைகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

 

உடன் துணை மேயர் திரு.ரா. பாலசுப்பிரமணியம், வடக்கு மாநகர துணை ஆணையாளர் சுஜாதா, தெற்கு மாநகர துணை ஆணையாளர் யாதவ் அசோக் கிரிஷ், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.